வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 27 ஜூன் 2016 (15:55 IST)

சுவாதி கொலைக்கு சினிமாவும் காரணம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து

சுவாதி கொலைக்கு சினிமாவும் காரணம் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
சென்னை இளம்பெண் சுவாதி கொலை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சமுக நலன் கருதி தானாக முன்வந்து விசாரணை குறித்து காவல் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது 
 
இந்நிலையில் நடிகையும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
 
சுவாதியின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.
 
இது போன்ற செயல்களில் சினிமாவின் தாக்கமும் இருக்கிறது. சினிமாவில் காதல் அழகானதாக காட்டப்படுகிறது. அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
 
எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று மகளுக்கு மட்டுமின்றி மகனுக்கும் சொல்லித்தரவேண்டும், என்றார்.