இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாதிரியார் கைது


Ashok| Last Updated: புதன், 10 பிப்ரவரி 2016 (17:30 IST)
கோவையில் வயிற்று வலிக்கு சிறப்பு பிரார்த்தனை செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியில் தொந்தரவில் ஈடுபட்ட பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஜெப கூடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 

 
கோவை, பெரியநாயக்கன்பாளையதைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயிற்று வலியால் அவதிபட்டு வந்துள்ளார். உனக்கு சரியாக வேண்டுமென்றால் ஜெபம் செய்தால் போதும் என்று அந்த பெண்ணிடம் தோழி ராணி கூறியுள்ளார். தோழி கூறியபடி. சங்கனூரில் உள்ள சர்ச் ஆப் பெதஸ்தா என்ற ஜெப மையத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்குள்ள பாதிரியார் ஐசக் என்பவரிடம் வயிற்று வலியை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
அதற்கு அவர் பிரார்த்தனை செய்ய ரூ.30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளார். பின்னர், அந்த இளம்பெண் முதல் தவனையாக 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பாதிரியாரிடம் கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து, பிரார்த்தனை செய்ய ஜெப கூடத்திற்கு அப்பெண்ணை நள்ளிரவு அழைத்துள்ளார், அப்போது, பாதிரியார் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கணவனிடம் கூறியுள்ளார். 
 
இதை அறிந்த, அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த ஜெப மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த அவர்கள் ஜெப மையத்தில் இருந்த பாதிரியாரை தாக்க முயன்றனர்.
தகவலறிந்து வந்த துடியலூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பாதிரியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பாதிரியாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சங்கனூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :