வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (20:47 IST)

ஏலச் சீட்டு நடத்தி இரண்டரை கோடி ரூபாய் வரை சுருட்டி கொண்டு ஓடிய பெண்

கோவையில் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஏலச் சீட்டு நடத்தி, சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை மோசடி செய்த தாய் மற்றும் மகனை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
கோவை பீளமேடு உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நஜீரா பானு, மகளிர் சுய உதவி குழு மற்றும் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நஜீரா பானு மற்றும் அவரது மகன் அசாத் ஆகியோர் திடீரென வீட்டை கழி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர்
 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் பீளமேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால், நஜீரா பானு வசித்த வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்த போலீஸார் அப்பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மோசடி செய்தவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதியளித்த பின்னர் பாதிக்க்கப்பட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்