வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (12:05 IST)

குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி பரவ வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் எச்.ஐ.வி நோய் பரப்பப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் நோய்தொற்று பரவ வாய்ப்பிருப்பதாக விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் கூறியுள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருந்ததால், அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வாலிபர் ஒருவரிடம் தானமாக பெறப்பட்ட ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு செலுத்தப்பட்டது.
 
இதற்கிடையே அந்த வாலிபர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார். இது முழுக்க முழுக்க மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே. இவர்களின் கவனக்குறைவால் பாவம் அந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. இது சம்மந்தமாக 3 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் சண்முகராஜி பேசுகையில், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த நோய் தொற்றானது குழந்தைக்கும் பரவ நிறைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.