Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

17 வயது சிறுமி காதல் கல்யாணம்; வரதட்சணை கொடுமை: கணவன் மீது பாய்ந்தது வழக்கு!

17 வயது சிறுமி காதல் கல்யாணம்; வரதட்சணை கொடுமை: கணவன் மீது பாய்ந்தது வழக்கு!


Caston| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:24 IST)
விருதுநகர் மாவட்டத்தில் கண்ணன் என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்துவிட்டு அந்த சிறுமியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக கண்ணன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி ரோஸி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது பாட்டியுடன் வசித்து வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து ரோஸி பாட்டியின் எதிர்ப்பை மீறி காதலன் கண்ணனை திருமணம் செய்தார். இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் கண்ணன் அந்த சிறுமியிடம் வரதட்சனை கேட்டு துன்புறித்தி வந்துள்ளார். கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து 5 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு சிறுமியை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.
 
இதனால் அந்த சிறுமி முத்துப்பேட்டையில் உள்ள குழந்தைகள் நலக்காப்பகத்தில் அடைக்கலமானார். பின்னர் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் கண்ணன் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தலைமறைவாகி உள்ள அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :