மாடியில் இருந்து தவறி விழுந்த 8 மாத குழந்தை – உயிர்தப்பிய அதிர்ஷ்டம் !

Last Modified புதன், 11 டிசம்பர் 2019 (10:31 IST)
சென்னையில் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த 8 மாதக்குழந்தை ஒன்று கீழே விழுந்து உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் மிண்ட் பகுதியில் உள்ளது அடுக்குமாடி குடியிருப்பு. இதன் 5 ஆவது மாடியில் ஜினிஷா என்ற 8 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பால்கனி கம்பிகளின் இடைவெளி வழியாக கீழே விழுந்தது.

விழுந்த குழந்தை கீழே நிற்க வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ஒன்றில் விழுந்து பின்னர் தரையில் விழுந்துள்ளது. இதனால் குழந்தைக்கு பெரிதாகக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உடனடியாக மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றபடி பயப்பட வேண்டிய அளவுக்கு எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளனர்இதில் மேலும் படிக்கவும் :