Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்வருடன் கைகோர்த்த கிரிஜா: நான்கு அமைச்சர்கள் பதவி காலி?

முதல்வருடன் கைகோர்த்த கிரிஜா: நான்கு அமைச்சர்கள் பதவி காலி?

வெள்ளி, 23 டிசம்பர் 2016 (13:10 IST)

Widgets Magazine

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.


 
 
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக தனது அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் அறைக்கு சென்று அவரை சந்தித்தார்.
 
முதல்வர் பன்னீர்செல்வம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்திப்பு சிறிது நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
 
ராம மோகனராவ் வீட்டில் சோதனை நடத்தியதை தொடர்ந்து அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் உள்ள நான்கு அமைச்சர்களின் பதவி பறிபோகலாம் என தகவல்கள் வருகின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

துணை வேந்தர்களா? இல்லை அரசியல்வாதிகளா?; டிஸ்மிஸ் செய்யுங்கள் - ஸ்டாலின் கொந்தளிப்பு

சசிகலா நடராஜன் அதிமுக கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று துணை வேந்தர்கள் கூறியிருப்பது, ...

news

மனிதர்கள் இல்லை என்றால் உலகம் என்னவாகும்?? (வீடியோ)

மனிதர்கள் உலகில் இல்லை என்றால் உலகம் எவ்வாறு இருக்கும் என்ற கற்பனை வீடியோ ஒன்றி ...

news

ரஜினியின் மகள் நீதிமன்றத்தை நாடினார்: விவாகரத்து கோரி மனு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விவகாரத்து கோரி சென்னை ...

news

தமிழ்நாட்டில் வசிக்கும் ஆர்யாவுக்கு ஜல்லிக்கட்டு என்றால் தெரியாதா?

நடிகர் ஆர்யா ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் ...

Widgets Magazine Widgets Magazine