Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்வர் ஓ.பி.எஸ்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் சென்று ஆதரவு!

Sasikala| Last Modified செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (09:40 IST)
அதிமுகவில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது முதல் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை  தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம்  ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். தற்போது  ஆட்சியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

 
திரையுலகைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாலா, கங்கை அமரன் முன்னர், நடிகர்கள் தியாகு, ராமராஜன்,  மனோபாலா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று முதல்வர் ஓ.பன்னீர்  செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடந்தது. அப்பொழுது தமிழகம் முழுவதும் பரவிய  ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியிருந்தார்.  அதைத் தொடர்ந்து தற்போது கிரீன்வேஸ் சாலை வீட்டில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை  தெரிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ்.


இதில் மேலும் படிக்கவும் :