சென்னையில் பூட்டிய வீட்டில் கொள்ளை!

Last Updated: வெள்ளி, 22 ஜனவரி 2021 (11:18 IST)

சென்னை வியாசர்பாடியில் முகமது அபி முஸ்தபா என்பவர் வீட்டில் 17 சவரன் நகை மற்றும் இதரப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் முகம்மது அபி முஸ்தபா. இவர் நேற்று முந்தினம் குடும்பத்தோடு தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 17 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி அரைஞாண் கொடி, ரூ.27 ஆயிரத்தை மர்மக் கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது. மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்த போது அதிர்ச்சியான முஸ்தபா இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :