1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2016 (15:00 IST)

குழந்தை திருமணத்தில் சென்னை முதலிடம்; கிராமப்புறங்களை முந்தியது

குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.மாநிலத்திலேயே 15 வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் சென்னையில் தான் அதிகம் நடைபெறுகிறது என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
 

 
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 5480 பெண் குழந்தைத் திருமணங்கள் சென்னையில் நடந்துள்ளன. சென்னைக்கு அடுத்து கோயம்புத்தூரில் 3025 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 2000திற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.
 
குழந்தை திருமணங்கள் கிராமப்புறத்தில் தான் அதிகம் நடக்கிறது என்று, இதற்கு எதிராக தொடர்ந்து போராடும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதிக மக்கள் தொகை இருக்கிற நகர்ப்புறங்களில் தான் குழந்தை திருமணங்கள் தற்போது நடைபெறுகின்றன.
 
உத்தரப்பிரதேசம். பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1.5 லட்சம் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.
 
மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குழந்தைத் திருமணம் செய்து கொண்ட பெண்களில் 16,855 பேர் குறைந்த வயதில் ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளனர்.15-18 வயது வரம்பில் மணமான பெண்கள் பற்றிய போதிய விபரம் தெரியவில்லை.