சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து: முதல்வர் அறிவிப்பு

Edappadi Palanismayy
Last Modified வியாழன், 11 ஏப்ரல் 2019 (09:26 IST)
மத்திய அரசு அறிவித்த சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக பொதுமக்களிடம் இருந்தும் விவசாயிகளிடம் இருந்தும் தமிழக அரசு நிலம் கைப்பற்றியது செல்லாது என்றும், எட்டு வாரங்களில் கையகப்படுத்திய நிலங்களை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். இதனால் சேலம், தருமபுரி பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் ஊடகங்கள் தெரிவித்தனர்

இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளார். இதனால் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்றும், இந்த திட்டமே ரத்தாகின்றது என்றும் தெரிய வருகிறது
முதல்வரின் இந்த முடிவுக்கு சேலம், தருமபுரி பகுதி மக்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :