1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (15:41 IST)

சென்னையில் வெளுக்கும் மழை; சாலையில் தேங்கும் நீர்: ஜரூர் பணியில் மாநகராட்சி!

சென்னையில் மழை வெளுத்து வாங்குவதால் சாலைகளில் நீர்தேங்க துவங்கியுள்ளது. 
 
தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் வலுவடைந்துள்ளதால் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சுற்றுவட்டார மாவட்டங்களில் 100 முதல் 120 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தற்போது முன்னர் கூறியது போல சென்னையில் மழை வெளுத்து வாங்குவதால் சாலைகளில் நீர்தேங்க துவங்கியுள்ளது. எனவே, கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும், நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.