காவல்த்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி!
காவல்த்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி!
சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் ஜார்ஜை மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
ஆர்கே நகரில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் செல்வாக்கை நிரூபிக்க ஒவ்வொரு கட்சியும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இடைத்தேர்தல் என்றால் ஆளும்கட்சியின் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் ஜார்ஜ் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படுவார் எனவே அவரை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் குற்றச்சாட்டை வைத்து கோரிக்கைவிடுத்தது.
இந்நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம் ஆணையர் ஜார்ஜை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிற்ப்பித்துள்ளது. புதிய ஆணையர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.