வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (12:02 IST)

அமைச்சர் ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட7 பேர் மீதான வழக்கிற்கு திடீர் தடை

பெரியகுளம் தலித் பூசாரி தற்கொலை விவகாரத்தில், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட7 பேர் மீதான வழக்கை பெரியகுளம் நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை க தடை வித்தது.
 
கடந்த 7.12.2012 ஆம் அன்று தலித் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா, மற்றும் பாண்டி உள்ளிட்ட 7 பேர் மீது தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பெரியகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இந்த நிலையில், இந்த வழக்கில் உள்ள ஓ.ராஜா உள்ளிட்ட7 பேரும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். இந்த வழக்கு சம்பந்தமாக எனக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. எனவே, இந்த வழக்கை பெரியகுளம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தற்கொலை செய்து கொண்ட நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.ராஜா உள்ளிட்ட7 பேர் மீதான வழக்கை பெரியகுளம் நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர், தென்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.