Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னை கார் விபத்தில் மனைவியோடு உடல் கருகி மரணமடைந்த கார் ரேஸர் அஷ்வின்!!

சனி, 18 மார்ச் 2017 (12:08 IST)

Widgets Magazine

பிரபல கார் ரேஸர் அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகிய இருவரும் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 
 
அஷ்வினும், அவரது மனைவி நிவேதிதாவும் அதிகாலை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தனர். 
 
அப்போது பிஎம்டபிள்யூ கார் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை மோதி உடைத்து மரத்தின் மீது மோதி சிக்கியது. இதில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
 
காரை விட்டு வெளியே வர முடியாததால் அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
 
அந்த வழியாக சென்றவர்கள் கார் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
முதலில் காரில் உள்ளவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் கார் நம்பரை கொண்டு அடையாளம் காணப்பட்டனர். 
 
2003 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றவர் அஷ்வின். அஷ்வினின் மனைவி நிவேதிதா மருத்துவராவார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

புதிய திரைப்படத்தை திரையரங்கிலிருந்து பேஸ்புக்கில் லைவ் கொடுத்த மர்ம ஆசாமி

புதிய திரைப்படம் ஒன்றை திரையரங்கிலிருந்தபடியே பேஸ்புக்கில் லைவ் கொடுத்த ஆசாமியை போலீஸார் ...

news

தீபாவை எதிர்த்து மாதவன் களமிறங்க பல கோடி பேரம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி

நேற்று தீபா கணவர் மாதவன் திடீரென களமிறங்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பேரம் ...

news

எரிமலை மண்ணில் வளரும் ரோஜா: ரூ.2,60,000 விலையிலும் அமோக விற்பனை!!

லண்டனைச் சேர்ந்த ஆடம்பர மலர்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, 3 ஆண்டுகள் வாடாத ரோஜா மலர்களை ...

news

ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டலில் அடைப்பு - சசிகலா பாணியில் பாஜக!

மணிப்பூரில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பாஜக தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை ...

Widgets Magazine Widgets Magazine