வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (22:51 IST)

சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூண்டோடு மாற்றம்

சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

 
இது குறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பி.வெற்றிவேல், வட சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக பூங்கா நகர் கே.எஸ். சீனிவாசன்,  தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக சத்தியநாராயணன் (எ) தி.நகர் சத்யா, தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக ஜி.செந்தமிழன் எம்எல்ஏ, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக தண்டரை கே.மனோகரன் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக வாலாஜாபாத் பி.கணேசன் எம்எல்ஏ.வும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக சிறுணியம் பி. பலராமன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் நிமிக்கப்பட்டுள்ளனர்.
 
இதன் மூலம் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.