வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (02:56 IST)

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கத் தடை

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க வேண்டாம் என கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
 

 
இந்தியா முழுமைக்கும் வரும் 17 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பட்டு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என டஉத்தரவிட்டுப்பட்டுள்ளது.
 
இது குறித்து, கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது. விழா முடிவில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது.
 
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சிலைக்கு ரசாயன வர்ணத்தை சிலர் பூசிவருகின்றனர். இவ்வாறு ரசாயன விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்தால் நீர் நிலைகள் மாசுபடும்.
 
எனவே,  விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
 
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்ச்சையாக இந்து அமைப்புகள் கொண்டாடி வருவது குறிப்பிடதக்கது.