வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 18 மே 2016 (13:14 IST)

மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரியால் பாதிப்பு? :நீர் வரத்து அதிகரிப்பால் பீதியில் சென்னைவாசிகள்

சென்னை மழை வெள்ளம் என்பதும் முதலில் நினைவுக்கு வருவது செம்பரம்பாக்கம் ஏரி தான். கடந்த மழை வெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திறந்துவிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.


 
 
இந்நிலையில் கோடை வெயிலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு இந்த மழை இதமளித்தாலும், மீண்டும் வெள்ளம் வருமோ என்ற அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
 
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதால் கனமழை பெய்து வருகிறது.
 
கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 2,460 கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் சோழவரம் ,பூண்டி ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சென்னை வாசிகள் பீதியில் உள்ளனர்.