Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெமினி மேம்பாலத்தில் பட்டப்பகலில் நடந்த செயின்பறிப்பு: போலீசார் அதிர்ச்சி


sivalingam| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (12:50 IST)

எப்போதும் பிசியாக இருக்கும் சென்னையின் முக்கிய பகுதியான ஜெமினி மேம்பாலத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரிடம் செயின்பறிப்பு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்த ரயில்வே அதிகாரி முருகன் என்பவரின் மனைவி தனது குழந்தையை பள்ளியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அந்த வாகனம் ஜெமினி மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த மர்மநபர்கள் திடீரென அந்த பெண்ணின் வாகனத்தை காலால் எட்டி உதைத்தனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இளம்பெண்ணும் அவரது மகளும் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தபோது திடீரென அந்த இளம்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மர்மநபர்கள் மாயமாகினர்.

அமெரிக்க தூதரகம் இருப்பதால் ஜெமினி மேம்பாலத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். அவர்கள் முன்னிலையிலேயே பட்டப்பகலில் துணிகர செயின்பறிப்பு சம்பவம் நடந்துள்ளது போலீசார் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :