வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (17:16 IST)

போயஸ்கார்டன் டூ அப்போலோ ; களம் இறங்கிய மத்திய உளவுத்துறை அதிகாரிகள்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஏற்கனவே விசாரணையை தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
செப்.22ம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டது முதல், டிசம்பர் 5ம் தேதி அவர் மரணமடைந்தது வரை, வெளிப்படைத் தன்மை இல்லாததால் அனைத்துமே மர்மாகவே இருக்கிறது. அப்பல்லோவில் ஜெ. வின் உடல் நிலை தேறி வருகிறது. அவர் நன்றாக பேசுகிறார், நன்றாக சாப்பிடுகிறார், சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார், அவர் எப்போது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார் என அப்பல்லோ அறிக்கைகள் கூறின. அந்நிலையில் திடீரெனெ டிசம்பர் 4ம் தேதி மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் அவர் மரணமடைந்தார் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. 
 
மேலும், ஜெ. சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார் என அப்பலோ அறிக்கையும், ஜெ. மோசமான நிலையில், மூச்சு விட சிரமப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையும் கூறியுள்ளது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது
 
இதனால், அதிமுக அல்லாது மற்ற அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது மர்மம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணியின் அவர் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதோடு, ஜெ.வின் மரணம் குறித்து நீதி விசாரணை அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என் என கோரிக்கை வைத்தனர். அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவும் இதே கோரிக்கையை மத்திய அரசிற்கு விடுத்துள்ளார். 
 
இந்நிலையில், ஜெ. வின் மரணம் தொடர்பாக மத்திய அரசிற்கும் பல சந்தேகங்கள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே, ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையை ஏற்று விரைவில் சிபிஐ விசாரணை தொடங்கப்படலாம் என்கிற நிலையில், அதற்கு தொடக்கமாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அப்பல்லோவில் தங்கள் விசாரணையை தொடங்கி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார்தான் ஜெ.விற்கு சிகிச்சையளித்து வந்தார். எனவே, சிவக்குமார், ஜெ.விற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், ஒரு ஷிஃப்டுக்கு 3 பேர் என வேலை பார்த்த 9 மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் எனத் தெரிகிறது. அப்பல்லோவில் கிடைத்த சில சிசிடிவி வீடியோ பதிவுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை  அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக தெரிகிறது. அவர்களின் விசாரணை சசிகலா வரைக்கும் கூட செல்ல வாய்ப்பிருப்பதாக சில அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.