வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (16:00 IST)

இரட்டை இலை சின்னத்தை முடக்க மத்திய அரசு திட்டம்: அதிமுக எம்.பி.க்கள் கொந்தளிப்பு

ஆர்.கே.இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பினர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக எம்.பி.க்கள், இரட்டை இலை முடக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது என குற்றம்சாட்டி உள்ளனர்.


 


 
இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்க நாளை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கூட்டம் கூடுகிறது. இதில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பில் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
உத்திரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தேர்தல் நேரத்தில் தனது தந்தையிடம் சண்டையிட்டு பிரிந்து வந்த பின் அவருக்கு சமாத்வாதி கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சசிகலா அணிக்கும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என தினகரன் உள்பட பல அதிமுக எம்.பி.க்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 
 
ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் யாருக்கு என தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவது சரியில்லை. இதற்கு பின்னால் மத்திய அரசின் சதி உள்ளது என அதிமுக எம்.பி.க்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்க திட்டமிட்டு வருகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.