வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (04:35 IST)

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ

மரபணு மாற்றப்பட்ட கடுகு உள்ளிட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்று தொடர்ந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது சான்சாண்டோ, பாயர், பி.ஏ.எஇ.எ.ப். போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்.
 
இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், இந்திய விவசாயிகள் இந்த நிறுவனங்களைச் சார்ந்துதான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையை உருவாக்கவும் நரேந்திரி மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில்தான், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு நடத்த உள்ள கூட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு, திறந்தவெளியில் பயிரிட அனுமதி வழங்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
சுற்றுப்புறச் சூழல் மருத்துவத்திற்கான அமெரிக்கக் கழகம், ‘‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், இனவிருத்தி செயல்பாடுகள், மனநலம் ஆகியவற்றில் கடும் விளைவுகள் ஏற்படும்’’ எனக் குறிப்பிட்டு, இப்பயிர்களுக்கு தடை விதிக்க பரிந்துரைத்துள்ளது.
 
எனவே, மரபணு மாற்றப்பட்ட கடுகு உள்ளிட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.