வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (21:35 IST)

மதிய உணவில் பூரான் - அரசுப் பள்ளியில் அவலம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மண்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்டபள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
 

 
இந்த நிலையில், அந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் போது, ஒரு மாணவனின் உணவில் பூரான் செத்துக் கிடந்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மாணவன், இது குறித்து சத்துணவு அமைப்பாளர் விஜயனிடம் தெரிவித்தார்.
 
மேலும், அந்த உணவுகளை மற்ற மாணவர்களும் சாப்பிடாமல் அதை கீழே கொட்டினர்.
 
இந்த தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கு காரணமான சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
 
தகவல் அறிந்த வாழப்பாடி பி.டி.ஓ. சுந்தர்ராஜ், துணை பி.டி.ஓ. கந்தசாமி ஆகியோர் சம்பவ இத்திற்கு விரைந்த சென்று, இனிமேல் இது போன்று நடக்காது என உறுதி அளித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களை சமாதானம் செய்தனர். இதனால் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
 
பூரானுடன் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட்டு இருந்தால், அவர்களது உடல் நலத்திற்கு பெரும் கேடு ஏற்பட்டு இருக்கும்.