1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 25 மார்ச் 2015 (13:23 IST)

செல்போன்களுக்கான வாட் வரி 9.5% குறைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக பட்ஜெட்டில் செல்போன்களுக்கான வாட் வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
2015-16 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
 
அப்போது பேசிய அவர் செல்போன்களுக்கான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி தற்போதுள்ள 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வாட் வரி குறைக்கப்படுகிறது. இந்த வரி குறைப்பு காரணமாக செல்போனின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
 
அதேபோல, 10 குதிரைத்திறன் வரையிலான மோட்டார் பம்புகள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி, 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.