வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2017 (14:30 IST)

கனரா வங்கி ரூ.1.5 கோடி மோசடி: சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

வங்கிகளில் கடன் வழங்குதல் என்ற பெயரில் அதிக அளவில் மோசடிகள் நடைபெறுவதாக அங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அந்த வகையில் தற்போது கனரா வங்கியின் பெயர் அடிபட்டுள்ளது. 
 
திருப்பூரில் உள்ள கனரா வங்கியில் தொழில் கடன் வழங்குவதில் ரூ.1.5 கோடி மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியது . இதனை தொடர்ந்து இந்த வழக்கில் வங்கி மேலாளர் உள்பட ஐந்து பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
திருப்பூரில் உள்ள சாமளாபுர கனரா வங்கி கிளையில் ராமச்சந்திரன் என்பவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வங்கிக் கடன் வாங்கிக் தருவதாக கூறியுள்ளார். 
 
ரூ. 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வழங்குவதாக கூறி 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வழங்கியுள்ளார். இதனால் விசைத்தறியாளர்கள் வங்கி மேலாளர் மீது புகார் அளித்தனர். 
 
சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மேலாளர் ராமச்சந்திரன், தரகர்கள் பரமசிவம், செல்வம் விநியோகஸ்தர்கள் கந்தசாமி, அங்கீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.