1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (21:51 IST)

ஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் 100வது நாளில் 144 தடை உத்தரவை மீறி ஒருசில அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த பல பொதுநல மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று அன்றைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்தியதாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் இடையே சமூக விரோதிகள் ஊடுருவியதே வன்முறைக்கு காரணம் என ரஜினி உள்பட பலர் கூறிய நிலையில் தற்போது இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்தியதாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.