வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (13:07 IST)

காவிரியின் குறுகே அணை கட்டுவதை எதிர்த்துப் போராட்டம்: கொங்குதேச மக்கள் கட்சி ஆதரவு

காவிரி ஆற்றுக்குக் குறுக்கே கர்நாடகா அணைகள் கட்டுவதைத் தடுக்க, காவிரி டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு 28 ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு கொங்குதேச மக்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து, கொங்குதேச மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் எம்.முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
தமிழகத்தின் உயிர் நாடியாக இருப்பது காவிரி நதி. தமிழகத்தின் வாழ்வாதாரங்களில் ஒன்றாக கலந்துவிட்ட இந்த விவகாரத்தில், காவிரி நதியின் குறுக்கே, மேகதாது, ராசி மணல் ஆகிய இரு இடங்களில் கர்நாடக அரசு அணைகள் கட்ட முடிவு செய்துள்ளது.
 
இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல். இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல். எனவே, இந்த தீமையை தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழிழன் கடமையாகும்.
 
எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகவும், சட்டத்துக்கு விரோதமாகவும் அணைகள் கட்ட முற்படும் கர்நாடக அரசைத் தடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பு மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்ளது. ஆனாலும், மத்திய அரசு பாரா முகத்துடன் உள்ளது. 
 
இந்நிலையில், காவிரிக்குக் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதைத் தடுக்க, காவிரி டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு 28 ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த உள்ளது. இந்த போராட்டத்திற்கு கொங்குதேச மக்கள் சார்பில் முழு மனதுடன் ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.