1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 28 மார்ச் 2015 (15:30 IST)

காவிரியில் கர்நாடகா தடுப்பணை: ஒன்றுசேர்ந்து பிரதமரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், இதை தடுத்துநிறுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை தமிழக எம்.பி.க்கள் 59 பேர் சந்தித்து மனு கொடுக்கின்றனர்.



 

 
மாலை 5.15 மணியவில், நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.பி.க்கள் அனைவரும் பிரதமர் மோடியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து மனு கொடுக்கின்றனர்.
 
துணை சபாநாயகர் தம்பித்துரை உள்ளிட்ட 48 அதிமுக எம்.பி.க்கள், கனிமொழி, திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், தங்கவேலு ஆகிய 4 திமுக எம்.பி.க்கள், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), டி.கே.ரங்காஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) அன்புமணி ராமதாஸ் (பாமக) சுதர்சன் நாச்சியப்பன் (காங்கிரஸ்) புதுச்சேரி கண்ணன் ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்கிரஸ்) ஆகிய 59 எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியை ஒன்றாக சென்று சந்தித்து மனு கொடுக்கின்றனர்.
 
கர்நாடக அரசு காவிரியில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவரங்களையும் பிரதமர் மோடியிடம் அதிமுக எம்.பி.க்கள் வழங்குகிறார்கள்.
 
காவிரியில் கர்நாடகா தடுப்பணை கட்டும் திட்டத்தை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் கடையயைப்புப் போராட்டம் நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.