வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2017 (12:16 IST)

குற்றவாளியின் புகைப்படம் அரசு நலத்திட்டங்களில்: ஜெயலலிதாவின் புகைப்படங்களுக்கு தடை??

தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஜெயலலிதாவின் புகைப்படங்களை பயன்படுத்தத் தடை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.


 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள், தமிழக அரசு நலத்திட்டங்களில் பயன்படுத்தி வருவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. 
 
ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால், அவருக்கான தண்டனை மட்டுமே கைவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் குற்றவாளி தான் என்பது உறுதியானது.
 
ஊழல் வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவின் படம் அரசு அலுவலகங்களிலும், பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை ஜெயலலிதாவின் பெயரில் அறிவித்துள்ளார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
 
எனவே, ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.