வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 17 மே 2016 (10:44 IST)

ரூ.570 கோடி விவகாரம் - அதையெல்லாம் நாங்க விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு

திருப்பூர் அருகே கண்டெய்னரில் பிடிபட்ட ரூ. 570 கோடி பணம் தொடர்பாக, புலனாய்வுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
 

 
கோவையிலிருந்து, ரூ. 570 கோடி பணத்தோடு, விசாகப்பட்டினம் நோக்கிச்சென்ற 3 கண்டெய்னர் லாரிகள், திருப்பூர் அருகே கடந்த சனிக்கிழமையன்று பிடிபட்டன. இந்த பணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், சுமார் 18 மணி நேரத்திற்குப் பின், இந்த பணம் தங்களுக்கு உரியது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உரிமை கோரியது.
 
எனினும் இப்பணம் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ-க்கு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்நிலையில், ரூ. 570 கோடி ரூபாய் பணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
நேற்று திங்களன்று இந்த மனு நீதிபதிகளின் பார்வைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ள பணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.