வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (14:47 IST)

மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சி தான் அம்மா குடிநீர் திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

அம்மா குடிநீர் திட்டம் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்படுவதற்கு துளி கூட வாய்ப்பு இல்லாத இத்திட்டத்தை அறிவித்திருப்பது சென்னை மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 


 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்காக அம்மா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
லுக்கு முன் செயல்படுத்தப்படுவதற்கு துளி கூட வாய்ப்பு இல்லாத இத்திட்டத்தை அறிவித்திருப்பது சென்னை மாநகர மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.
 
இத்திட்டத்தின்படி ஏழை மக்கள் குடிநீர் பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்’’ என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
 
ஆனால், இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எதையும் அவர் அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் இலவசக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க முடியாது என்பதை நன்றாக அறிந்திருப்பது தான்.
 
அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்பட வில்லை. இத்திட்டத்திற்கான செலவு குறித்த மதிப்பீடுகள் செய்யப்படவில்லை.
 
தண்ணீரை சுத்திகரிப்பதற்கான எந்திரங்கள் முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
 
இந்தப் பணிகள் அனைத்தும் விதிகளின்படி செய்யப்பட வேண்டுமானால் குறைந்த பட்சம் 6 மாதங்கள் ஆகும். இன்னும் 15 நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டால் அதன்பிறகு எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது.
 
தேர்தல் வாக்குறுதியின்படி தமிழ்நாடு முழுவதும் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறை ஜெயலலிதாவுக்கு இருந்திருந்தால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாம்.
 
இந்த திட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைத்திருப்பதுடன், 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலையும் கிடைத்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.