25 மரக்கன்று நட்டால் பி.இ சேர்கையில் 1 மதிப்பெண்
25 மரக்கன்றுகள் நட்டிருந்தால் பி.இ விண்ணப்பதாரர்களுக்கு, சேர்கையின் போது 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, மக்களுக்கு விழிபுணர்வு ஏற்படுத்தும் வகையில், தனது தேர்தல் அறிக்கையில் வித்தியாசமான ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் தொழிற் கல்வி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் 25 மரக்கன்று நட்டிருந்தால், அவர்களுக்கு 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து பேசிய வைகோ, மரங்களை வளர்த்து பாதுக்காப்பது அரசின் கடமையாகும், பொது மக்களிடம் மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டம், 50 மரக்கன்றுகள் நட்டிருந்தால் 2 மதிப்பெண், 100 மரக்கன்றுகள் நட்டிருந்தால் 3 மதிப்பெண், மரக்கன்றுகள் நட்டதாக பொய்யான தகவல் அளித்தால் 5 மதிப்பெண் குறைக்கப்படும், என்று கூறினார்,
மேலும், தமிழகத்தை பசுமையாக மாற்ற மரம் நடுதல் இயக்கத்தை மக்கள் நலக் கூட்டணி அறிவித்து இருப்பதாக வைகோ கூறினார்.