Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உன் பேச்சு ‘கா’ பேச மாட்டேன் போ: விஜயபாஸ்கரை ஓரம் கட்டும் எடப்பாடி!

உன் பேச்சு ‘கா’ பேச மாட்டேன் போ: விஜயபாஸ்கரை ஓரம் கட்டும் எடப்பாடி!

Last Modified: புதன், 14 ஜூன் 2017 (10:01 IST)

Widgets Magazine

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசாமல் இருந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில், காது கேட்காத குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் வந்திருந்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவம் தொடர்பான விஷயங்களை விளக்கி கூறினார். ஆனால் அதனை முதல்வர் பழனிச்சாமி கேட்டாலும், முகம் கொடுத்து பேசவே இல்லை. நிகழ்ச்சி முடியும் வரை இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் விஜயபாஸ்கரை புறக்கணிப்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படையாக தெரிந்தது. அதே நேரத்தில் அதிமுகவின் ஜெயா டிவியில் முதல்வர் பழனிச்சாமியின் பெயர் மட்டுமே கூறப்பட்டது. விஜயபாஸ்கரின் பெயர் கூறப்படவில்லை.
 
சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கர் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் வந்தன. இதனையடுத்து அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என அந்த நேரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் வந்தன. ஆனால் விஜயபாஸ்கர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஸ்டாலினுக்கு எதிராக வியூகம் வகுக்கும் ரஜினி: தீவிர அரசியலில் விரைவில்!

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாகவும், அவர் முன்பைவிட தற்போது மிகவும் ...

news

கல்லூரி மாணவி லாட்ஜில் கொலை? அழைத்து வந்த மர்ம வாலிபர் யார்?

கும்பகோணம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் லாட்ஜில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் ...

news

ரஜினி தாத்தா வந்தாலும் ஜெயிக்க முடியாது. சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் ...

news

எடப்பாடி அரசை ரத்து செய்யுங்கள்: தமிழக கவர்னரிடம் அறப்போர் இயக்கம் மனு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆதரிக்க பல எம்.எல்.ஏக்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் ...

Widgets Magazine Widgets Magazine