வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 29 ஜூலை 2014 (17:33 IST)

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயிலில் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இன்று மாலை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயிலில் குண்டுவெடிக்கும் என்று இரு நபர்கள் பேசிக்கொண்டிருந்ததை தான் கேட்டதாக வேளச்சேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்ததையடுத்து அங்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 
ரயில் நிலையத்தில் மத்திய, மாநில ரயில்வே பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.