வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 7 மே 2016 (20:36 IST)

கோவையில் ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி: 91 பேர் கைது

திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 91 பேர் கைது செய்யப்பட்டனர்.


 
 
தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி மதுரையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, கோவைக்கு புறப்பட்டு சென்றார்.
 
கோவைக்கு வந்த ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 15 பெண்கள் உள்ளிட்ட 91 பேர் இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷமிட்ட 91 பேரும் கைது செய்யப்பட்டனர்.
 
2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரின் போது தமிழர்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பாதுகாக்கத் தவறியதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.