Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவுக்கு ஆதரவு கிடையாது - சூசகமாக சொன்ன பாஜக தலைவர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (19:02 IST)
முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கே மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்று மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

 

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "அதிமுக எம்.எல்.ஏ.-க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும்.

முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வத்தை ஏற்கனவே ஜெயலலிதா நியமித்துள்ளார். அதிமுக உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்" என சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நிலையில், தொடர் ரெய்டுகளால் கதிகலங்கி போயுள்ள அதிமுக வட்டாரங்கள் பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :