காலையில் ராஜினாமா; மாலையில் விலக்கல்: மீசையில் மண் ஒட்டாத பாஜக!


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 11 ஜனவரி 2017 (18:57 IST)
தமிழர்களுக்கு உணர்வுகளுக்கு புரிந்தகொள்ளாததால் விலகுவதாக காலையில் அறிவித்த இளைஞரணி துணை தலைவர் சத்தியபாமாவை மாலையில் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் சத்தியபாமா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டார். மேலும், தமிழர்களின் உணர்வைகளை புரிந்து கொள்ளாத பாஜகவில் இருந்து விலகுவதாகவும், பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், கட்சியின் கோட்பாடுகளை மீறி சுய விளம்பரத்துக்காக மத்திய அரசிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டதால் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பாஜக இளைஞரணி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ராஜினாமா செய்தவரை, பாஜக நீக்குவதாக அறிவித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :