Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சேம் சைடு கோல் போடும் சுப்பிரமணியன் சுவாமி: அதிமுகவின் பின்னணியில் பாஜக தான் உள்ளது!

சேம் சைடு கோல் போடும் சுப்பிரமணியன் சுவாமி: அதிமுகவின் பின்னணியில் பாஜக தான் உள்ளது!

Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2017 (10:51 IST)

Widgets Magazine

ஆளும் அதிமுகவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆட்சி கலையும் சூழல் நிலவி வருகிறது. இந்த பிரச்சணைக்கு காரணம் அதிமுகவின் பின்னணியில் பாஜகவினர் சிலர் இருப்பதே என மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


 
 
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் முதல்வர் பதவியை கைப்பற்ற முயன்றதும் போர்க்கொடி தூக்கியுள்ளார் பன்னீர்செல்வம்.
 
இருதரப்பினரும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். மிகவும் அசாதரணமான சூழலில் உள்ள அதிமுக. ஓபிஎஸின் பின்னணியில் திமுக இருந்து இயக்குகிறது என அவருக்கு துரோகி பட்டம் சூட்டியுள்ளார் சசிகலா.
 
ஆனால் பன்னீர்செல்வமோ தனக்கு பின்னால் திமுகவோ, பாஜகவோ யாரும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்.
 
தற்போது தமிழக அரசியலில் உள்ள குழப்பத்திற்கு காரணம் பாஜக தலைவர்கள் தான். இவர்கள் இரு தரப்பினருக்கும் பின்னால் இருக்கிறார்கள். மத்திய அரசோ, பாஜக தலைவரோ இதில் சம்பந்தப்படவில்லை. மற்ற பாஜக தலைவர்கள் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக இந்த விவகாரங்களில் தலையிடுகிறார்கள் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலாவுக்கு அல்வா கொடுத்த எம்எல்ஏக்கள்: பிடியில் இருந்து தப்பி பன்னீர்செல்வத்திடம் தஞ்சம்!

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மீது சரமாரியாக ...

news

மன உளைச்சல் காரணமாக நடிகை தூக்கு மாட்டி தற்கொலை!

வங்க மொழிப்படங்களில் நடித்து வரும் திரைப்பட நடிகை பிடாஸ்டா சஹா மன உளைச்சலால் தற்கொலை ...

news

எம்எல்ஏக்கள் மீது நம்பிக்கை இழந்த சசிகலா: சிறைவைப்புக்கு காரணம் என்ன?

அதிமுக எம்எல்ஏக்களை சுதந்திரமாக நடமாடவிடாமல் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மகாபலிபுரம் ...

news

கண்ணீர் விட்டு அழுத சசிகலா

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கண்னீர்

Widgets Magazine Widgets Magazine