1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (08:10 IST)

பாஜக அரசு தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது: கருணாநிதி

பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், தொழில் அதிபர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்கு உள்ள உரிமையை பாதுகாக்க தவறினால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மக்களவையில் பாஜக அரசு தாக்கல் செய்திருப்பது சரியானதல்ல என்று தெரிவித்துள்ளார்.
 
பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், தொழில் அதிபர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது என்பதை இந்த முடிவு உறுதி செய்து விடும் என்று கூறியுள்ளார். 
 
சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியை மூட மத்திய தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர் இந்த கல்லூரியை ஏற்று நடத்துவதை பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுளார்.
 
அன்னை தெரசாவை கொச்சைப்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியிருப்பது தேவையில்லாத கருத்து என்று கூறியுள்ளார்.
 
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட சேலம், கரூர், நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். 
 
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் விடுதலை ஆவதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்துளார்.