வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2017 (19:07 IST)

ஜல்லிக்கட்டில் பாஜகவின் இரட்டை வேடம் வெளியே வந்தது!

ஜல்லிக்கட்டில் பாஜகவின் இரட்டை வேடம் வெளியே வந்தது!

தமிழகத்தில் போராட்டங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் ஒரே கருத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால் பாஜக மட்டும் இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கிறது.


 
 
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் இந்த முறை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என பொதுமக்கள் வெளிப்படையாக கூறிவருகின்றனர்.
 
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பாஜக ஆதரவளிக்கும் என கூறினார்.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் தமிழக விவகாரங்களில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து கூறுபவருமான மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குறிய வகையில் ஜல்லிக்கட்டு குறித்து கருத்து கூறியுள்ளார்.
 
அதில் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை மத்திய அரசு கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கட்டாயம் அமல்ப்படுத்துவோம் என கூறியுள்ளார். இதன் மூலம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது.