அந்த ’போட்டோ’ ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுத்தது இல்லை - ஓ.பி.எஸ். தவறான தகவல்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (12:59 IST)
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஒசாமா பின் பில்லேடன் படம் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் க்குக்கு பொங்கல் பண்டிகையை ஓட்டி தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது.

இனி மேல் இது போன்ற போராட்டங்கள் மூலம் அரசை எந்த விதத்திலும் நிர்பந்திக்க கூடாது என்ற உள்நோக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது ஜனவரி 23ஆம் தேதி வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

திட்டமிட்டே காவல் துறையினர் போராட்டங்காரர்கள் மீது தாக்குதல் கடும் தாக்குதல் நடத்தினர். அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர். பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. குறிப்பாக ஆட்டோ மற்றும் குடிசை வீடுகளுக்கு காவல்துறையினரே  தீ வைத்தது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் சட்டசபையில் காவல் துறையினரின் தாக்குதலுக்கு காரணம் குறித்து முதல்வர் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார். அப்போது போராட்டத்தின்போது சிலர் பின்லேடன் படத்தை பயன்படுத்தினர். இது போன்று திட்டமிட்டு போராட்டத்தை திசைதிருப்பு அமைதியை சீர்குலைக்க முயன்றனர் என்று தெரிவித்தார்.

அப்போது அவர் பின்லேடன் உருவம் பொறித்த படத்தை ஒரு பைக்கில் தொங்க விட்டவாரும், ஒருவர் வண்டியில் நின்று கொண்டு மோடியின் படத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு உடல் முழுவதும் செருப்பு மாலை இருப்பது போன்ற ஒரு படத்தை காட்டினார். இதனையே போராட்டத்தில் வன்முறையை உருவாக்கும் சதியாக குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட புகைப்படும் சில தினங்களுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர், அந்த வாகனம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பதும் வந்திருக்கிறது.

இந்நிலையில் போராட்டத்தின்போது TN 05 BC 3957 என்ற எண்ணுடைய இந்த இருசக்கர வாகனத்தில் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர் புகைப்படமும் அதனுடன் அல்காய்தா – உஸாமா பின் லேடன் படமும் உள்ளதுபோல் உள்ள ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததது.

தற்போது அது படம் ஜல்லிக்கட்டின் போது எடுக்கப்பட்டது அல்ல என்று நிரூபணமாகி உள்ளது. இஸ்லாமியர் நடத்திய போராட்டத்தின் போது கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் உறுதி செய்துள்ளது.

பின்லேடன் போட்டோ பொறித்த இருசக்கர வாகனத்தில் சென்றது இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த சலாவூதீன், மாபாஷா என்பது தெரியவந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சலாவூதீன், மாபாஷா இருவரும் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் மாதம்  இந்திய தேசிய லீக் கட்சி நடத்திய, பாஜக மாநில தலைமை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொள்ள பைக்கில் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சலாவுதீன், தன்னுடைய பைக்கில் ஒரு கெத்துக்காக பின்லேடன் கெத்துக்காகத்தான் பதிவு செய்து இருந்ததாகவும், ஒரு புகைப்படம் எனக்கு இந்தளவுக்கு மனவேதனையை கொடுத்து விட்டது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்த பிறகே அந்த போட்டோவுக்கும், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

சமூக விரோதிகள் யாரோ அந்த படத்தை ஜல்லிக்கட்டு போராட்ட படத்தினுடே இணைத்து போராட்டத்தை திசை திருப்ப முனைந்திருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :