1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ashok
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (16:09 IST)

போலீசாரிடம் பேரம் பேசும் பிக்பாக்கெட் பெண்- வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு

சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகரில் பேருந்து பிக்பாக்கெட் அடித்து பிடிபட்ட பெண் ஒருவர், பெண் போலீஸிடம் 20 ஆயிரம் லஞ்சம் தருவதாக பேரம் பேசும் சம்பவ காட்சிகள்  வாட்ஸ்அப்’பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகரில் மாலையில் மாநகர அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அருகில் இருந்த பயணியின் கைப்பையை திருடிக்கொண்டு ஓடினார். இதைப் பார்த்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூச்சல் போட்டனர்.இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பிக்பாக்கெட் பெண்ணை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் அந்த பெண்ணை அருகில் பயணிகள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவத்தை பார்த்த பெண் போலீஸ் ஒருவர் அடிப்பதை தடுத்து நிறுத்தி சம்பவத்தை பற்றி விசாரித்தார்.

இந்நிலையில் பிக்பாக்கெட் பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த கூட்டத்தை கலைந்து போகும்படி பெண் போலீசார் கேட்டுக்கொண்டார்.அப்பொழுது சிலர் அங்கு இருந்து போக மறுத்தனர். சிலர் அந்த பெண்ணை அடிக்க முயன்றனர். விசாரித்துக்கொண்டு இருக்கும்பொழுது அருகில் இருந்த ஒருவர் ஆத்திரத்தில் தலையில் ஓங்கி அடிக்கிறார்.
நின்றுகொண்டிருந்த சிலர் இந்த பிக்பாக்கெட் பெண்ணுடன் நிறைய பேர் வந்திருப்பாங்க, நல்லா விசாரியுங்கள் என்று பெண் போலீசிடம் தெரிவித்தனர்.

இப்படி சுற்றிலும் பொது மக்கள் நின்று கொண்டு, ஆவேசமாக பேசும் கொண்டு இருக்கும்பொழுது எதைப்பற்றியும் கவலைப்படாமல், பிக்பாக்கெட் அடித்த அந்த பெண் போலீசிடம் உங்களுக்கு ரூ.20 ஆயிரம் தருகிறேன் என்னை விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பெண் போலீஸ் பொதுமக்களை பார்த்து தன்னிடம் 20ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக கூறுகிறாள் என்று கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பெண் போலீஸும் பொதுமக்களும் பிடிபட்ட பெண்ணை அடிக்க முயல்கின்றனர். அருகில் இருந்த ஒருவர் பிக்பாக்கெட் பெண்ணை ஓங்கி ஒரு குத்து விடுகிறார். இந்த காட்சிகளை அருகில் இருந்தவர் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்அப்’பில் வெளியாகி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு வாகனத்துடன் வந்த போலீஸார் பிக்பாக்கெட் பெண்ணை சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்