வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (10:04 IST)

லஞ்சப் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் மனைவியும் கைது

பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக  பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை கைது செய்ததோடு அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர், உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு தன்னிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டார். எனவும் அதில் ஒரு லட்சத்தை ரொக்கமாகவும், மீதி ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் கணபதியிடம் கொடுத்ததாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
 
அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திடீர் சோதனை நடத்தினார். மேலும், கணபதியின் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகம் அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள அவரின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.
 
இதனையடுத்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணைவேந்தர் கணபதியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தற்பொழுது அவரது அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.