காயத்ரியை விட பலமடங்கு நாகரீகமானவர் பரணி - எப்படி தெரியுமா?


Murugan| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (16:48 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள காயத்ரியை விட, அதிலிருந்து வெளியேறிய நடிகர் பரணி,  தான் நாகரீமானவர்  என்பதை நிரூபித்துள்ளார்.

 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணி அங்கிருந்த இதர 14 பேர்கள் யாரிடம் ஒட்ட முடியாமல் தவித்துவந்தார். அதன் பின் ஒரு சூழ்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு அவரை அடிக்கப் பாய்ந்தார். மேலும், காயத்ரி ரகுராம் உட்பட யாருக்கும் பரணியை பிடிக்கவில்லை. அவர் அங்கு இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என காயத்ரி ரகுராம் உட்பட பலரும் பகீரங்கமாக புகார் கூறியதால்,  இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது என கருதிய பரணி, சுவற்றின் மீது ஏறி அங்கிருந்து வெளியேற முயன்றார். எனவே, அவரை நிகழ்ச்சி குழுவினர் நீக்கி விட்டனர்.
 
ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் அவருக்கு பெரிய ஆதரவு இருக்கிறது. அவர் ஒரு அப்பாவி , நல்லவர் திட்டம் இட்டு அவரை கார்னர் செய்து வெளியேற்றிவிட்டனர் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
அந்நிலையில், நேற்று ஒளிபரப்பப்பட்ட ஒரு காட்சியில், நாம் நாமாக இருந்தால் தான் மக்கள் ஓட்டளிப்பார்கள் என ஓவியா கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த காயத்ரி, நிகழ்ச்சியில் இல்லாத பரணியை கேவலமானவர் என்கிற தொணியில், பரணியை விட கஞ்சா கருப்பு கேவலமானவரா என கேட்டார்? இது பலரையும் முகம் சுழிக்க வைத்தது. 
 
இந்நிலையில், நேற்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கமல்ஹாசனிடம் பரணி உரையாடினார். அப்போது ஏன் வெளியேறினீர்கள்? உங்களுக்கு யார் தொல்லை கொடுத்தது? என கமல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பரணி,  அதுபற்றி கூற விரும்பவில்லை. ஏனெனில், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருப்பார்கள் என நாகரீமாக பேசினார். 
 
பரணியின் நாகரீகம் கூட காயத்ரி ரகுராமிற்கு இல்லை என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :