1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 27 செப்டம்பர் 2014 (17:57 IST)

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் மற்றும் தண்டனை விபரம்

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
 
பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
 
வழக்கில் தொடர்புடைய சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் 3 பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகிறார். மேலும், அவர் இனிமேல் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குள் தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மேல் நீதிமன்றம் சென்று தண்டனையை குறைக்கவோ அல்லது விடுதலை பெறவோ செய்யாமல் தேர்தலில் நிற்க முடியாது.