கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள்: எடப்பாடி தொடங்கி வைத்தார்

Last Updated: புதன், 14 ஆகஸ்ட் 2019 (13:56 IST)
ரூ.154 கோடி செலவில் வாங்கப்பட்ட கழிவறை வசதியுடன் கூடிய பேருந்துகளை எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 235 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 118 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கழிவறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்து பின்னோக்கி வருவதை அறிய ஒலி எச்சரிக்கை வசதியும் உள்ளது.

முக்கியமாக மாற்றுத் திறனாளிகள் கொண்டு வரும் ஊன்று கோலை பாதுகாப்பாக வைக்கவும், தீயணைப்பு கருவிகளும் பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல வசதிகளை கொண்டு உருவாக்கப்பட்ட 500 பேருந்துகளை ரூ.154 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளன. இன்று முதலமைச்சர் பழனிசாமி, இந்த பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்துகள் சேலம், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், கோவை, நெல்லை, ஆகிய ஊர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :