வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (15:19 IST)

தமிழ்நாட்டில், வங்கி வாராக்கடன் ரூ.5003 கோடி

தமிழ்நாட்டில், வங்கி வாராக்கடன் ரூ.5003 கோடியாக உள்ள நிலையில், கடன் பெற்ற 378 பேரின் பெயர் பட்டியல் வெளியாகிறது.

வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிறன. இதையொட்டி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது. மக்கள் சேமிப்பை மக்கள் நன்மைகளுக்காகச் செலவிட வேண்டும்.

வங்கி வாராக் கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

வங்கிகளில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் இருந்த 400 பேர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

இன்று மேலும், நாடு முழுவதும் 4085 பேர் அடங்கிய வாராக்கடன் பட்டியல் வெளியிடப்படுகிறது. மொத்தம் 70 ஆயிரத்து 637 கோடி ரூபாய் வங்கிகளுக்கு வாராக்கடனாக உள்ளது.

தமிழகத்தில் மட்டும் ரூ.5003 கோடி வராக்கடனாக உள்ளது. இதை வங்கிக்கு திருப்பி செலுத்தாத 378 பேரின் பெயர் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் வெளியிடுகிறார்.

அந்தப் பட்டியல் 18 ஆம் தேதி மாலை வெறியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.