Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா யார் என்ற குழப்பத்தில் பங்களாதேஷ் நாளிதழ்

Sasikala| Last Updated: சனி, 31 டிசம்பர் 2016 (12:54 IST)
முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா  நடராஜனின் புகைப்படத்திற்குப் பதிலாக, சசிகலா புஷ்பாவின் புகைப்படத்தை, பங்களாதேஷ் நாளிதழ் ஒன்று தவறாக வெளியிட்டுள்ளது.

 
இதனை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்ற குழப்பம் தமிழகம் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் குழப்பம்  எழுந்துள்ளது. பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, போட்டிபோட களத்தில் இறங்கினார். ஆனால், அவரது கணவர் அதிமுக தொண்டர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானார்.
 
இதனை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூடி, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜனை ஒருமனதாகத் தேர்வு  செய்தனர். இதுபற்றிய செய்தியை பங்களாதேஷில் வெளியாகும் த டெய்லி அப்செர்வர் (TheDailyObserver) என்ற நாளிதழ், செய்தி வெளியிட்டது. ஆனால், முகப்புப் பக்கத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு எனக் கூறி, சசிகலா நடராஜன் புகைப்படத்திற்குப் பதிலாக, சசிகலா புஷ்பாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை டிசம்பர்  30ஆம் தேதி வெளியான நாளிதழில் வெளியாகியுள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :