Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மெர்சல் படத்திற்கு விலங்கு நல வாரியம் தடை - படம் வெளியாகுமா?


Murugan| Last Modified வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:36 IST)
விஜய் நடித்து அடுத்த வாரம் வெளியாகவிருந்த மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் திடீர் தடை விதித்துள்ளது.

 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் தீபாவளி ரிலீசிற்கு தயாராக இருக்கிறது. அந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மெர்சல் பட தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜேந்திரன் என்ற தயாரிப்பாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
அதனால், மெர்சல் என்கிற தலைப்பில் விளம்பரம் செய்யக்கூடாது என தடை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் நடந்த வழக்கு விசாரணையில் மெர்சல் பட தலைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ராஜேந்திரன் மேல் முறையீடு செய்தார். அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இப்படி பல சிக்கலுக்கு ஆளாகி அடுத்த வாரம் படம் வெளியாகும் என்ற நிலையில், விலங்கு நல வாரியம் மூலம் மீண்டும் இப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
 
அதாவது, இப்படத்தின் டீசர் வீடியோவில், நடிகர் விஜய் மேஜிக் செய்து ஒரு புறாவை வரவழைப்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், அது கிராபிக்ஸ் புறா என நிரூபிக்கும் ஆதாரங்களை படக்குழு இன்னும் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. ஏனெனில் விலங்கு மற்றும் பறைவைகளை துன்புறுத்தக்கூடாது என சட்டம் இருக்கிறது. 
 
மேலும், ராஜ நாகத்தை காட்டும் ஒரு காட்சியில், தவறாக நாகப் பாம்பு எனக் குறிப்பட்டிருப்பதாகவும் விலங்கு நல வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இப்படத்திற்கு தடை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்ட போது இந்த புகார்கள் எழவில்லை. அதேபோல், டீசரில் கூட காட்டப்படாத பாம்பு பெயர் விவகாரம்  விலங்கு நல வாரியத்திற்கு எப்படி தெரியவந்தது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
 
தகுந்த ஆதாரங்களை கொடுத்த பின்பே, இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :