Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழக இளம் விஞ்ஞானிகளின் பலூன் செயற்கைக்கொள்: ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.

புதன், 26 ஜூலை 2017 (06:54 IST)

Widgets Magazine

விண்வெளி துறையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக அபார வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தமிழக மாணவர்கள் விண்வெளித்துறையில் தொடர்ந்து உலக அளவில் சாதனை புரிந்து வருகின்றனர். 
 
சமீபத்தில் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்து தமிழக மாணவர்  ரிஃபாத் ஷாரூக் குழுவினர் சாதனை புரிந்த நிலையில் தற்போது இவரது குழுவினர் மீண்டும் ஒரு சாதனையை செய்யவுள்ளனர்.
 
ரிஃபாத் ஷாரூக் உறுப்பினராக உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் என்ற அமைப்பை சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் தற்போது கலாம்  சாட்-2 என்ற பெயரில் புதிய பலூன் செயற்கைகோள் ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த பலூன் செயற்கைக்கோள் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
 
இதுகுறித்து ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் தலைவர் மதிகேசன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது, 'எங்கள் அமைப்பின் அடுத்தகட்ட முயற்சியாக ‘என்எஸ்எல்வி கலாம் சாட்-2’ பலூன் செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு  ரூ.2.5  லட்சம். அரசு பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் சேர்ந்து இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இந்த பலூன் செயற்கைக்கோள் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது' என்று கூறினார்,.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சர்ச்சைக்குரிய பகுதியில் அதிநவீன தியேட்டர்: சீனாவின் நடவடிக்கையால் வியட்நாம் அதிருப்தி

சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லைப்பிரச்சனை குறித்து மோதல் போக்குடன் நடந்து கொண்டு ...

news

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்: ஈபிஎஸ் அதிரடியால் பரபரப்பு

சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்து எம்.எல்.ஏ ஆறுக்குட்டி ஈபிஎஸ் அணிக்கு தாவியதில் இருந்தே ...

news

என்னை விடுதலை செய்யுங்கள்: புதிய ஜனாதிபதிக்கு முதல் மனுவை அனுப்பிய கர்ணன்

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக நேற்று மதியம் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவியேற்று ...

news

ரோபோ சங்கரை வறுத்தெடுத்த வைகோ தொண்டர்கள்: அதிர்ச்சி தகவல்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த வந்த ரோபோசங்கர் தற்போது தான் நல்ல பட ...

Widgets Magazine Widgets Magazine